ஒன்டாரியோவில் மான் வேட்டையில் ஈடுபட்ட இருவருக்கு 16000 டொலர் அபராதம்
ஒன்டாரியோ மாகாணத்தின் தண்டர் பே (Thunder Bay) பகுதியில் கடந்த ஆண்டு நிகழ்ந்த சட்டவிரோத மான் வேட்டை தொடர்பாக இரண்டு பேருக்கு தலா 8,000 கனடிய டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்களின் வேட்டை உரிமம் இரண்டு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சாலையை கடந்து துப்பாக்கிச் சூடு நடத்தியது மற்றும் வேட்டையாடிய விலங்கின் உடலை கைவிட்டது உன சில குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டது.
குற்றம் சுமத்தப்பட்ட நோர்மன் பெர்னோயர் மற்றும் லெனார்ட் ஓய்னோனென் ஆகியோர், குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இந்த வழக்கு 2024 நவம்பர் 3 அன்று விசாரணைக்கு வந்தது.
இயற்கை வளங்கள் அமைச்சகம் தெரிவித்ததாவது, காடுகள் வெட்டப்பட்ட பகுதியில் அழுகிய நிலையில் மான் ஒன்றின் சடலம் கிடப்பது பற்றிய தகவலைத் தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் மோப்ப நாய் பிரிவு விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இருவரும் நவம்பர் 1ம் திகதி மானை வேட்டையாடியதும், அப்போது அருகில் இருந்த தாய்மூஸுக்கு சுட்டு காயப்படுத்தியதும் தெரியவந்தது.
சந்தேக நபர்கள், அந்த காயமடைந்த மானை தேடவோ, சம்பவத்தை அதிகாரிகளுக்கு தெரிவிக்கவோ செய்யாமல் அங்கிருந்து வெளியேறிவிட்டனர் என தெரிவிக்கப்படுகின்றது.