ஒரே நாளில் 2 லாட்டரியில் பரிசு ; மகளால் அடித்த ஜாக்பாட்
வாழ்நாளில் ஒருமுறையாவது நமக்கு லாட்டரியில் பரிசு அடித்துவிடாதா? என லாட்டரி பிரியர்கள் டிக்கெட்டை வைத்துக்கொண்டு சுற்றும் நிலையில், ஒரே நாளில் இரண்டு லாட்டரிகளில் பரிசுகளை அடித்து பலரையும் பொறாமைப்பட வைத்து இருக்கிறார் அமெரிக்காவை சேர்ந்த பெண்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவை சேர்ந்தவர் டென்னிஸ் பார்க்ஸ், கார்தேஜ் பகுதியை சேர்ந்த இவருக்கு லாட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கம் இருந்துள்ளது.
மகளால் கொட்டிய பண மழை
பார்க்ஸ்க்கு விழுந்த லாட்டரியில் $50,000 பரிசு விழுந்துள்ளது.அதாவது, இந்திய மதிப்பில் 43 லட்சம் பரிசு அடித்துள்ளது. ஸ்க்ராட்ச் ஆப் டிக்கெட்டில் பரிசு அடித்ததால் அதை வாங்குவதற்கு லாட்டரி அலுவலகத்திற்கு பரிசு வாங்க சென்றுள்ளார்.
அப்போது, அவரது மகள் பிறந்த நாள் பரிசாக ஒரு லாட்டரி டிக்கெட்டை பரிசாக கொடுத்து இருக்கிறார். அந்த லாட்டரிக்கும் பரிசாக இந்திய மதிப்பில் 86 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
ஒரே நாளில் அடுத்தடுத்து லாட்டரியில் பரிசு விழுந்ததால் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்து இருக்கிறார் டென்னிஸ் பார்க்ஸ். ஒருமுறையாவது பரிசு அடிக்குமா என ஏங்கியவருக்கு அடுத்தடுத்து லாட்டரியில் பரிசு அடித்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தனக்கு பரிசு அடித்தது பற்றி கூறிய பார்க்ஸ், தற்போது கிடைத்துள்ள தொகையை கொண்டு நான் கட்டாமல் வைத்து இருக்கும் நிலுவைத்தொகையை செலுத்திவிடுவேன். குடும்பத்துடன் ஒஹியோ செல்ல திட்டமிட்டு இருக்கிறேன். எதிர்பாராத விதமாக கிடைத்துள்ள இந்த பரிசுத்தொகைய கொண்டு பெரிய அளவில் திட்டமிட்டுள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.