கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 வயது சிறுவன் பலி
கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பதின்மூன்று வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிமிகிகாமாக் பழங்குடியின சமூகம் வாழும் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளான்.
தீவிர விசாரணை
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 17 வயதான சிறுவன் ஒருவனை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் வேறு எவருக்கும் தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகம் வெளியிடவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.