ஒரே மாதிரி தோற்றம்கொண்ட 2 பேர் ஏதேச்சையாக சந்தித்த சுவாரஸ்யம்
லண்டனில் ஒரே மாதிரி தோற்றம்கொண்ட 2 பேர் ஏதேச்சையாக சந்தித்துக்கொண்ட சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
லண்டனில் இருந்து பாங்காக் சென்ற விமானத்தில்தான் அவர்கள் சந்தித்துள்ளனர். இந்நிலையில் இருவரும் ஒரே நபர் என நினைத்து விமானப் பணியாளர்களும் சற்றுக் குழம்பிப் போயினர்.
வயது மட்டும்தான் இருவருக்கும் வித்தியாசமாக இருந்தது. அதாவது அவர்களில் பேருந்து ஓட்டுநரான ஒருவருடைய வயது 58. இன்னொருவருடைய வயது 62. அவர் ஒரு கட்டடக் கலைஞர்.
அதேவேளை அவர்கள் இருவரின் பெயரும் மார்க் கார்லண்ட் என தெரியவந்தபோது மேலும் சுவாரஸ்யம் கூடிப்போனது. இதன்பின்னரே விமானப் பணியாளர்களின் குழப்பம் தீர்ந்தது.
அதேவேளை எதார்த்தமாக இவர்கள் இருவரும் ஒரு விமானத்தில் சந்தித்துக் கொண்ட நிகழ்வு பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் “நாங்கள் இருவரும் 15 மைல் தொலைவில் மட்டுமே இருந்துள்ளோம். ஒரே வழியில் பயணித்துள்ளோம். இருவருக்குமே ஒரு நண்பர் பொதுவாக இருந்துள்ளார்” என்றுள்ளனர்.
“நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்தபோது மிகவும் ஆச்சரியப்பட்டோம். மேலும் பல பொதுவான விஷயங்களைக் கண்டறிந்தோம்” என்றுள்ளனர்.