ஹமில்டன் வாகன விபத்தில் இருவர் பலி
ஹமில்டனில் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Upper Centennial Parkway பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஹாமில்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட போர்ட் Ford F-150 வாகனம் தெற்கே நோக்கி சென்றுகொண்டிருந்த போது, சார்வெலெட் சில்வரொடா Chevrolet Silverado (2014) வாகனத்துடன் முதலில் மோதியுள்ளது.
அதன்பின் அந்த F-150 வாகனம் எதிர்வரும் பாதைக்கு வேகமாக சாய்ந்து, கியா சொரெனெட்டோ 2015 Kia Sorento வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.
இந்த விபத்து எதிர்பாராத விதமாக மிக கடுமையானதாக இருந்தது. Kia Sorento வாகனத்தில் இருந்த ஓட்டுநர் மற்றும் பயணி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
F-150 வாகன ஓட்டுநர் பாதுகாப்பான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். Silverado வாகன ஓட்டுநருக்கு எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் முழுமையான விசாரணையை மேற்கொண்டு வருகிறது.