கீவ் அருகே ஒரே பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 20 உடல்கள்
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 37 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது.
பெப்ரவரி 24 அன்று உக்ரைன் மீது தரை, வான் மற்றும் கடலில் படையெடுப்பைத் தொடங்கியபோது பல கட்டிடங்கள் தரையில் அழிக்கப்பட்டன மற்றும் மக்கள் அகதிகளாக வெளியேறினர். பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறிய ரஷ்யா, உக்ரைனை ஆக்ரோஷமாக தாக்கியது. பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்த போதிலும் போர் நிறுத்தம் இன்னும் எட்டப்படவில்லை.
தற்போது கீவ் அருகே ஒரே தெருவில் 20 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷிய ராணுவத்திடம் இருந்து, கீவ் அருகே உள்ள புச்சா நகரத்தை உக்ரைன் படைகள் கைப்பற்றிய பின்னர், உக்ரைனின் அதே தெருவில் குறைந்தது 20 ஆண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக AFP தெரிவித்துள்ளது.
தலைநகரின் வடமேற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பாதையில் சடலங்களில் ஒருவரின் கைகள் கட்டப்பட்டிருந்ததாகவும், சடலங்கள் பல நூறு மீற்றர்களுக்குச் சிதறியதாகவும் ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.
ஆனால் மரணத்திற்கான காரணம் தற்போது வரையில் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.