கனடாவில் மேலும் 20 கொரோனா மரணங்கள் பதிவு!
கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றால் 1,102 பேர் பாதிக்கப்பட்டதோடு 20 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் இதுவரை மொத்தமாக 17இலட்சத்து 19ஆயிரத்து 604 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 29ஆயிரத்து 43பேர் மரணமடைந்துள்ளனர்.
கனடாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 24ஆயிரத்து 191 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 765 பேர் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,191 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 16இலட்சத்து 66 ஆயிரத்து 370 ஆக உயர்ந்துள்ளது.