கனடாவில் பாடசாலை பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 மாணவர்கள் காயம்
கனடாவின் கியூபெக் மாகாணத்தின் நோர்ட் டேம் டு ஸ்கேர் இஸோடோன் பகுதியில் பாடசாலை பேருந்து விபத்துக்கு உள்ளானதில் 20 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
பாடசாலை பேருந்து லொறியொன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த மாணவாகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து 271 வீதியில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு காயமடைந்த மாணவர்களில் 15 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் முன்னெச்சரிக்கை அடிப்படையில் அவர்கள் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேருந்து சாரதிக்கு லேசான காயம் ஏற்பட்டதுடன் லொறி சாரதிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லையென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்திற்கான காரணம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.