மருத்துவமனையின் மேற்கூரையில் 200க்கும் மேற்பட்ட மனித உடல்கள்! அதிச்சியில் அதிகாரிகள்

Pakistan
By Sulokshi Oct 15, 2022 09:12 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  பாகிஸ்தானில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றின் மேற்கூரையில் அழுகிய நிலையில் 200 சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மேற்கூரையில் இருந்தே இவ்வாறு அழுகிய நிலையில் 200க்கும் மேற்பட்ட மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

லாகூரிலிருந்து 350 கிமீ தொலைவில் உள்ள முல்தான் பகுதியில் உள்ள நிஷ்டர் மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கிருந்து நூற்றுக்கணக்கான மனித உடல் உறுப்புகளும் மீட்கப்பட்டன.

மருத்துவமனையின் மேற்கூரையில் 200க்கும் மேற்பட்ட மனித உடல்கள்! அதிச்சியில் அதிகாரிகள் | 200 Human Bodies On The Roof Hospital Pakistan

பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியின் ஆலோசகராக பொறுப்பு வகிக்கும் சவுத்ரி ஜமான் குஜ்ஜார், கடந்த வியாழக்கிழமை நிஷ்டர் மருத்துவமனைக்கு சென்றபோது அவரிடம் ஒரு நபர் இந்த அதிர்ச்சி விவரத்தை கூறினார். இதனையடுத்து உடனே நிஷ்தார் மருத்துவமனையின் பிணவறையின் கதவை திறக்க உத்தரவிட்டு உள்ளே சென்று ஆய்வு செய்தார்.

அப்போது பிணவறையின் கூரையில் 200 அழுகிய உடல்கள் வீசப்பட்டிருந்தன. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் ,

"பிணவறை அதிகாரிகளிடம், 'இந்த உடல்களை விற்கிறீர்களா? என்று கேட்டேன். அதன்பின், மருத்துவர்களிடம் சென்று, 'என்ன நடக்கிறது என்பதை விளக்குமாறு அவர்களிடம் கேட்டேன்'.

மருத்துவர்கள், இவை மருத்துவ மாணவர்களால் கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டதாக கூறினர். அங்கு இருந்த பெண்களின் உடல்கள் கூட மறைக்கப்படவில்லை.

மருத்துவமனையின் மேற்கூரையில் 200க்கும் மேற்பட்ட மனித உடல்கள்! அதிச்சியில் அதிகாரிகள் | 200 Human Bodies On The Roof Hospital Pakistan

அத்தனை சடலங்களும் நிர்வாண கோலத்தில் வீசப்பட்டிருந்தன.மருத்துவக் கல்விக்காகப் பயன்படுத்தப்பட்ட அனைத்து உடல்களும் முறையாக அடக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். எனது 50 வருட வாழ்க்கையில் இதுபோன்ற எதையும் நான் பார்த்ததில்லை" என்று தெரிவித்தார்.

நிஷ்தர் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர். மரியம் அஷ்ரப் கூறுகையில், "இந்த உடல்கள் மாணவர்களால் மருத்துவ பரிசோதனைக்கு பயன்படுத்தப்படுகின்றன.

இது அரசாங்கத்தால் வகுக்கப்பட்ட விதிகளின்படி செய்யப்படுகிறதாகவும் தெரிவித்தார். பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி பர்வேஸ் இலாஹி இந்த விவகாரத்தை விசாரிக்க உயர் அதிகாரம் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டார்.

சிறப்பு சுகாதார செயலாளர் முஸாமில் பஷீர் தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழு விசாரணையை முடிக்க மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கண்டெடுக்கப்பட்டுள்ள உடல்களை உடனடியாக உரிய முறைப்படி தகனம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த மனித உடல்கள் அனைத்தும் கழுகுகளுக்கு தீவனமாக பயன்படுத்த கூரையில் வைக்கப்பட்டதாக சிலர் கூறினர்.

அதேவேளை  இந்த உடல்கள் அனைத்தும் தங்கள் பகுதியிலிருந்து காணாமல் போனவர்களின் உடல்களாக இருக்கலாம் என பலூசிஸ்தான் பிரிவினைவாதிகள்  கூறி வருகின்றனர்.      

மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, வவுனியா

01 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், கொழும்பு

28 Mar, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US