BBC, HSBC உள்ளிட்ட முன்னணி இணையத்தளங்களில் சைபர் தாக்குதல்

Cyber Attack World Technology
By Vironika Nov 18, 2026 04:40 AM GMT
Report

BBC, HSBC UAE வங்கி, Air France மற்றும் IKEA உள்ளிட்ட சுமார் 200 முக்கிய இணையத்தளங்கள், நிதித் தகவல்களைத் திருடும் மற்றும் Apple சாதனங்களை முடக்கும் நோக்கில் தீங்கிழைக்கும் சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரதான நிறுவனங்கள் தங்களது பயனர்களின் ஒன்லைன் அனுபவங்களை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்தும் 'Optimizely' டிஜிட்டல் தளத்தில், ஹெக்கர்கள் ஊடுருவி சிதைக்கப்பட்ட ஜாவாஸ்கிரிப்ட் (JavaScript) குறியீட்டைச் சேர்த்துள்ளதாக 'Cyber News' தெரிவித்துள்ளது.

BBC, HSBC உள்ளிட்ட முன்னணி இணையத்தளங்களில் சைபர் தாக்குதல் | 200 Top Websites Hit By Cyberattack

 இலக்கு வைக்கப்பட்ட178 இணையத்தளங்கள்

இதன் மூலம் சுமார் 178 இணையத்தளங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. பயனர்களின் கடன் அட்டை (Credit Card) எண்கள், கிரிப்டோகரன்சி (Cryptocurrency) ஆகியவற்றைத் திருடுவதையும், மேலும் பலவீனப்படுத்துவதற்காக Apple சாதனங்களில் குறியீடுகளைப் பதிவேற்றுவதையுமே ஹெக்கர்கள் இந்தத் தாக்குதலின் மூலம் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர்.

இந்த சைபர் தாக்குதலை முதன்முதலில் கண்டறிந்த பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஸ்கொட் ஹெல்மே (Scott Helme) தனது வலைப்பதிவில் குறிப்பிடுகையில், "உலகின் மிகவும் அதிகம் பார்வையிடப்பட்ட தளங்களான ஜூம் (Zoom), பிபிசி (BBC), சிஎன்என் (CNN), சேல்ஸ்ஃபோர்ஸ் (Salesforce), கிட்லாப் (GitLab), ஐக்கியா (IKEA), எச்எஸ்பிசி , ஈக்குஃபாக்ஸ் (Equifax), ஏர் பிரான்ஸ்-கேஎல்எம் (Air France-KLM), லெட்ஜர் (Ledger) மற்றும் பீகொக் (Peacock) ஆகியவை இந்தப் பட்டியலில் அடங்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், "தாக்குதல் நடத்தியவர்களின் [கிரிப்டோ] பணப்பைகளுக்கு (Wallets) நவம்பர் 16 ஆம் திகதி சுமார் ஒன்பது மணி நேரத்திற்குள் சுமார் 7,040 அமெரிக்க டொலர் பெறப்பட்டுள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட தளங்களிலிருந்து பெரும்பாலான தீங்கிழைக்கும் குறியீடுகள் நீக்கப்பட்டுவிட்டதாக ஹெல்மே தெரிவித்தார்.

இதற்கிடையில், 'Optimizely' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "Optimizely Web Experimentation" வாடிக்கையாளர்களைப் பாதித்த பாதுகாப்புச் சம்பவத்தைக் கண்டறிந்து கட்டுப்படுத்தியுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளது.

மேலும் எக்ஸ் (X) தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், "பாதிக்கப்பட்ட பாதை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது, ஊடுருவப்பட்ட குறியீடு அகற்றப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளனர்" என்றும் அது மேலும் குறிப்பிட்டுள்ளது.  


மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சிட்னி, Australia

18 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி

16 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, பூந்தோட்டம்

18 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், நீர்வேலி

15 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, வவுனியா

16 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada, யாழ்ப்பாணம்

28 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

16 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, டுசில்டோஃப், Germany

09 Dec, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US