கிண்ணத்தை வென்ற RCB அணி.... ரசிகர்களின் கனவை நனவாக்கிய மகளிர் அணி!
2024 மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் கிண்ணத்தை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வென்றுள்ளது.
மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மகளிர் அணியை வீழ்த்தி ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
டெல்லியில் நேற்றிரவு இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 18.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில்ஷஃபாலி வர்மா அதிகபட்சமாக 44 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் 4 விக்கெட்டுகளையும், சோஃபி மோலினக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஆஷா சோபனா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 114 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 19.3 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில்எல்லிஸ் பெர்ரி 35 ஓட்டங்களையும், சோஃபி டெவின் 32 ஓட்டங்களையும், ஸ்மிருதி மந்தனா 31 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.
இதன்படி ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இறுதி போட்டியில் வெற்றிபெறாத நிலையில், மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் அந்த வெற்றியை பதிவு செய்து கனவை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணி. நனவாக்கியுள்ளது.