க.பொ.த உயர்தர பெறுபேறு; கணித பிரிவில் வரலாற்று சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!
கிளிநொச்சி தமிழ் மகா வித்தியாலய மாணவன் தெய்வேந்திரன் திருக்குமரன் க.பொ.த உயர்தர கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
நேற்று நள்ளிரவு வெளியான 2025ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 8,300 பரீட்சாத்திகள் 3 'A' சித்தியை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

அதன்படி, இவர்களில் 7,477 பாடசாலை பரீட்சாத்திகளும், 823 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் அடங்குகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கிளிநொச்சி மாணவன் தெய்வேந்திரன் திருக்குமரன்கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.