அமெரிக்காவில் 22 வயதான இந்தியாவை சேர்ந்த பட்டப்படிப்பு மாணவன் சுட்டுக்கொலை!
அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் வணிக வளாகம் ஒன்றில் இந்தியாவை சேர்ந்த மாணவன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சிகாகோ நகரில் வணிக வளாகம் ஒன்றில் காசாளராக பகுதிநேர பணியில் இந்தியாவில் உள்ள தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த பி.பி.ஏ. பட்டப்படிப்பு முடித்த 22 வயதான சாய் தேஜா நுகரபு இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், மர்ம நபர்கள் திடீரென நேற்று வந்து, அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு, அங்கியிருந்த பெட்டியில் இருந்த பணத்தை எடுத்து கொண்டு தப்பியோடியுள்ளனர்.
இந்தியாவில் பி.பி.ஏ. பட்டப்படிப்பு முடித்த தேஜா, எம்.பி.ஏ. படிப்புக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.