சிறைச்சாலையில் இருந்து வந்த 22 வயதான இளைஞன் மர்மமான முறையில் உயிரிழப்பு!
கிளிநொச்சியில் கொலை வழக்கில் சிறைச்சாலையில் இருந்து வெளியே வந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் புகையிரத வீதிக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி - விநாயகபுரம் பகுதியில் கடந்த 31.12.2022 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை சம்பத்துடன் தொடர்புடையவர் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வாறான நிலையில், கடந்த மாதம் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 10 மணியளவில் அயலவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்த தகவலுக்கு அமைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் கிளிநொச்சி செல்வா நகர் பகுதியில் சேர்ந்த 22 வயதுடைய ஜோன் பிரகாஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் பார்வையிட்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் கொலையா? தற்கொலையா? என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.