கனடாவில் தொழிற்சாலை விபத்து;23 பேர் வைத்தியசாலையில் அனுமதி
கனடாவில் தொழிற்சாலையொன்றில் இடம்பெற்ற விபத்து காரணமாக 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென் கதரீன்ஸின் லோடஸ் மற்றும் ரிட்லி வீதி என்பனவற்றுக்கு இடையில் அமைந்துள்ள THK Rhythm கைத்தொழிற்சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரசாயன கசிவு காரணமாக இவ்வாறு பணியாளர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பஸ் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 20 பேருக்கு சிறிதளவான பாதிப்பு ஏற்பட்டதாகவும் முன் எச்சரிக்கையாக அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐந்து லீற்றர் ஹைட்ரோலிக் அமிலம் கசிந்ததாக தொழிற்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்செயலாக அமிலம் தாங்கிய கொள்கலனின் வால்வ் ஒன்றினை பணியாளர் ஒருவர் தட்டி விட்ட காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.