கனடாவில் விபத்து பற்றி பேசிக் கொண்டிருந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
கனடாவின் மிஸ்ஸிசாகுவாவில் அதிவேக நெடுஞ்சாலையில் சிறு விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தை தொடர்ந்து விபத்துடன் தொடர்புடைய சாரதிகள் வாகனங்களை விட்டு இறங்கி பேசிக்கொண்டிருந்த போது மற்றுமொரு வாகனம் இவர்கள் மீது மோதுண்டுள்ளது.
இந்த விபத்தில் பிரம்டனைச் சேர்ந்த 23 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மிஸ்ஸிசாகுவாவின் டிக்ஸீ வீதியில் இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டதில் சிறு விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த வாகனங்களின் சாரதிகள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த மற்றுமொரு வாகன சாரதியும் வாகனத்தை விட்டு இறங்கி இவர்களுடன் விபத்து பற்றி பேசத் தொடங்கியுள்ளார்.
இதன்போது அந்தப் பகுதி வீதியில் பயணம் செய்த நான்காம் வாகனம் மிக வேகமாக வந்து, விபத்து பற்றி பேசிக்கொண்டிருந்த மூவர் மீதும் மோதுண்டுள்ளது.
இதில் சம்பவ இடத்திலேயே 23 வயதான பெண் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.