ஜி.சீ.ஈ சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு
2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த 237,026 மாணவர்கள் உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
இன்று காலை சிறப்பு ஊடக சந்திப்பை நடத்திய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை குறிப்பிட்டுள்ளார். “நள்ளிரவு முதல் ஒன்லைனில் வெளியிடப்பட்ட பரீட்சை முடிவுகளை பதிவிறக்கம் செய்யலாம்.
இந்த ஆண்டு, 2.4 சதவீத மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையவில்லை.
பரீட்சைத் திணைக்களம்
சாதாரண தரப் பரீட்சை ஒரு செயல்திறன் பரீட்சை என்பதால், முதலாம், இரண்டாம் அல்லது மூன்றாம் இடங்களுக்கான மதிப்பெண்கள் மாகாண மட்டத்தில் வழங்கப்படாது என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
09 பாடங்களில் 09 ஏ சித்திகளைப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 13,392 ஆகும். எந்தவொரு மாணவரும் பாதிக்கப்படக்கூடாது. சித்தியடைய தவறிய மாணவர்கள் மீண்டும் அர்ப்பணிப்புடன் முயற்சிக்க வேண்டும்.
சித்தியடைந்த மாணவர்கள் தங்கள் எதிர்கால கல்வி முயற்சிகளில் வெற்றிபெற அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்” என பரீட்சைகள் ஆணையர் நாயகம் மேலும் தெரிவித்தார்.