ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் மரணம் ; ட்ரம்ப் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
உக்ரைன் - ரஷியா இடையிலான போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை தாமதிக்காமல் உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்கான உதாரணமாக வீரர்களின் மரணம் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அமைதிப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில்
அமெரிக்காவின் வாஷிங்டன்னில் உக்ரைன் - ரஷியா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ட்ரம்ப், இரு நாடுகளுக்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் போரில் இரு நாடுகளைச் சேர்ந்த 25,000 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்தத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டியதற்கான ஆதாரமாக இது உள்ளது. இதனை மேலும் அதிகரிக்கச் செய்யக்கூடாது.
அமெரிக்காவின் பல நிர்வாகங்கள் 8 ஆண்டுகளாகச் செய்யாததை, நாங்கள் பொறுப்புக்கு வந்த ஓராண்டில் செய்து முடித்துள்ளோம். உக்ரைன் - ரஷியா இடையிலான போர் உடனடியாக முடிவுக்கு வரும் எனக் குறிப்பிட்டார்.
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ராணுவத் துறை அமைச்சா் டான் டிரிஸ்கல் அபுதாபியில் ரஷிய அதிகாரிகளுடன் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
உக்ரைனில் நிலையான அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்தப் பேச்சுவாா்த்தை நடந்ததாகவும், இதில் முன்னேற்றம் கிடைக்கும் என்று நம்புவதாகவும் டிரிஸ்கல்லின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.