பெற்ற குழந்தைகளைக் கொன்று சூட்கேஸ்களில் மறைத்து வைத்த தாய் ; அதிரடி காட்டிய நீதிமன்றம்
தனது இரண்டு குழந்தைகளைக் கொன்று, அவர்களின் உடல்களை ஒரு சூட்கேஸ்களில் மறைத்து வைத்த நியூசிலாந்து பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எட்டு மற்றும் ஆறு வயதுடைய இரண்டு குழந்தைகளை 2018 ஆம் ஆண்டு கொடூரமாக கொலை செய்ததற்காக செப்டம்பரில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னர், நேற்று (25) அன்று ஹக்கியுங் லீக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

சூட்கேஸ் கொலைகள்
இந்த வழக்கு நியூசிலாந்து "சூட்கேஸ் கொலைகள்" என்று அழைக்கப்பட்டது.
தென் கொரியாவில் பிறந்த லீ, குழந்தைகளைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார், ஆனால் குழந்தைகளின் தந்தை புற்றுநோயால் இறந்தமையால் தாய் மன நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் இதன் காரணமாக குற்றமற்றவர் என்று கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
குற்றஞ்சாட்டப்பட்ட லீயின் வழக்கறிஞர்கள் குறைந்த தண்டனைகளை வழங்குமாறு கோரியிருந்தனர் எனினும், அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி , ஆயுள் தண்டனை விதித்துள்ளார்.