பார்வை பறிபோகும் அபாயத்தில் இம்ரான் கான் உடல்நிலை
பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பார்வை பறிபோகும் அபாயத்தில் இம்ரான் கான் உடல்நிலை உள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இந்நிலையில் சிகிச்சை அளிக்கப்படாத கண் நோய் அவரது கண்பார்வைக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும் என்று அவரின் ஆதரவளார்கள் குறிப்பிட்டுள்ளனர்.

2023 ஆகஸ்ட் முதல் சிறையில் இம்ரான் கான்
73 வயதான இம்ரான் கான் ஆகஸ்ட் 2023 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஊழல் மற்றும் அரசு ரகசியங்களை கசியவிட்டது தொடர்பான பல தண்டனைகளை அவர் எதிர்கொண்டுள்ளார்.
இம்ரான் கான் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI), அவர் நீண்ட காலமாக தனிமைச் சிறையில் கழித்ததாகவும் அவரை தொடர்பு கொள்வது மறுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயங்கள் உரிய செயல்முறை மற்றும் அவருக்கு எதிராக நடந்து வரும் சட்ட நடவடிக்கைகளின் நியாயத்தன்மை குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.
இதற்கிடையே இம்ரான் கானின் வலது கண்ணின் விழித்திரை நரம்பில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டதாக அவரின் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இது மத்திய விழித்திரை நரம்பு அடைப்பு என்று அழைக்கப்படுகிறது. உடனடியாகவும் முறையாகவும் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அவரது பார்வைக்கு நிரந்தர சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக குறிப்பிடப்படும் மருத்துவ அறிக்கையை அவரது கட்சியினர் வெளியிட்டுள்ளனர்.