ட்ரம்பின் சூளுரை ; ஈரானை நோக்கி விரையும் மற்றொரு கப்பலால் பதற்றம்
ஈரானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மேலும் ஒரு கடற்படையை அனுப்பி வைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
மேற்காசிய நாடான ஈரானுக்கும், அமெரிக்காவும் இடையே ஏற்கனவே பதற்றமான உறவு உள்ளது. இந்நிலையில், ஈரானில் அரசுக்கு எதிராக சமீபத்தில் நடந்த போராட்டங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆதரவு தெரிவித்தார்.

போராட்டக்காரர்களை ஒடுக்கினால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இத்துடன் நிற்காமல், போர் கப்பல்களை ஈரான் கடல் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில், டிரம்ப் நேற்று கூறியுள்ளதாவது: ஈரானை நோக்கி மற்றொரு வலிமையான கடற்படை சென்று கொண்டிருக்கிறது. இதன்பிறகாவது, அணு ஒப்பந்தம் செய்ய ஈரான் வரும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.