25 சதவீத வரி ; ஈரானின் நட்பு நாடுகளை மிரட்டும் டிரம்ப்
ஈரானுடன் வணிக உறவுகளைக் கொண்ட நாடுகளின் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று வாரங்கள் நிறைவடைகின்ற நிலையில், ட்ரம்ப் இந்த வரி விதிப்பை அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தெஹ்ரானுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய ஒரு நடவடிக்கையாக டிரம்ப்பின் இந்த வரி விதிப்பு நோக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, ஈரானுடனான வணிகத்தொடர்பு குறித்து எந்தவித விளக்கமும் இன்றி, வரி விதிப்பு உடனடியாக அமுல்படுத்தப்படுவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதேவேளை சீனா, ஈரானின் மிகப்பெரிய வணிக பங்காளியாக இருக்கின்ற நிலையில், ஈராக், ஐக்கிய அரபு இராஜ்சியம், துருக்கி மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் ஈரானுடன் வணிக உறவுகளைக் கொண்டுள்ளன.
இந்த வரி விதிப்பு காரணமாக எந்தெந்த நாடுகள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளும் என்பது உள்ளிட்ட மேலதிக தகவல்கள் எதனையும் வெள்ளை மாளிகை இதுவரை வெளியிடவில்லை .