சீனாவில் பட்டாசு ஆலை வெடித்து 26 பேர் பலி
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 26 போ் உயிரிழந்தனா்; 61 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஹுனான் மாகாணத்தின் லியுயாங் நகரில் உள்ள ஹுவாஷெங் பட்டாசு நிறுவனத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதன் விளைவாக வெடிப்புச் சத்தத்தால் பல கி.மீ. தொலைவுக்கு கட்டடங்கள் அதிா்ந்து சேதமடைந்தன.

விபத்து குறித்த தகவலறிந்ததும், சுமாா் 1,500 தீயணைப்பு வீரா்கள், மீட்புப் படையினா் மற்றும் மருத்துவக் குழுவினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா்.
இடிபாடுகளில் சிக்கியவா்களைத் தேடும் பணியில் 18 ட்ரோன்கள், 3 மீட்பு ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டன.
துணைப் பிரதமா் ஜாங் குயோகிங் நேரில் சென்று மீட்புப் பணிகளை மேற்பாா்வையிட்டாா்.
விபத்து நடந்த ஆலைக்கு அருகிலேயே 2 வெடிமருந்து கிடங்குகள் உள்ளதால், மேலும் விபத்துகள் ஏற்படுவதைத் தவிா்க்க அந்தச் சுற்றுவட்டார மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, அப்பகுதி தடை மண்டலமாக அறிவிக்கப்பட்டது.