கயானா படகு விபத்துக்குள்ளானதில் 27 பேர் பலி, 83 பேர் மாயம்

United States of America Death
By Sahana Jul 21, 2026 01:21 PM GMT
Report

தென் அமெரிக்க நாடான கயானாவின் வட அத்திலாந்திக் கடற்கரைக்கு அப்பால் இடம்பெற்ற பயணிகள் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை (18) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில், மீட்புப் பணியாளர்கள் இதுவரை 69 பேரை உயிருடன் மீட்டுள்ள நிலையில், மேலும் 83 பேர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் குறித்த படகில் 133 பேர் பயணித்ததாக பதிவுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. எனினும், மீட்கப்பட்டவர்களில் பலரின் பெயர்கள் உத்தியோகபூர்வ பயணிகள் பட்டியலில் இடம்பெறாததால், படகில் 179 பேர் வரை பயணித்திருக்கலாம் என கயானா பிரதமர் மார்க் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார். 

கயானா படகு விபத்துக்குள்ளானதில் 27 பேர் பலி, 83 பேர் மாயம் | 27 Dead 83 Missing In Guyana Ferry Accident

விபத்துக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், படகின் ஓட்டுநர் மற்றும் ஊழியர் ஒருவர் கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை வைத்திய பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஜுவான் எட்ஜில் தெரிவித்துள்ளார்.

பணிநேரத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியமை மற்றும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், படகோட்டி மற்றும் ஊழியர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

கயானா தலைநகர் ஜோர்ஜ்டவுனில் இருந்து போர்ட் கைடூமா பகுதிக்குச் சென்றுகொண்டிருந்த படகு, சனிக்கிழமை இரவு 11.01 மணியளவில் ஆபத்து சமிக்ஞையை அனுப்புவதற்கு முன்பே கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிர் தப்பிய பயணி எலினா மூன்சாமி, மிகப்பெரிய அலை ஒன்று மோதிய சில விநாடிகளிலேயே படகுக்குள் நீர் புகுந்து அது கவிழ்ந்ததாக தெரிவித்துள்ளார். "மிதந்து வந்த மரப்பெட்டி ஒன்றைப் பிடித்துக்கொண்டு உயிர் பிழைத்தேன்.

ஆனால், எனது 2 வயது குழந்தையின் கையை பிடித்திருந்தபோதும், அலையின் வேகத்தில் எனது கை நழுவி குழந்தை நீரில் மூழ்கியது" என அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். 

கயானா படகு விபத்துக்குள்ளானதில் 27 பேர் பலி, 83 பேர் மாயம் | 27 Dead 83 Missing In Guyana Ferry Accident

மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக அருகிலுள்ள பிரெஞ்சு கயானாவில் இருந்து பிரெஞ்சு இராணுவம் 12 அனுபவமிக்க உயிர்காப்புப் பணியாளர்கள், இரண்டு வைத்தியர்கள் மற்றும் ஒரு மெக்கானிக் ஆகியோரை அனுப்பியுள்ளது.

மேலும், அப்பகுதியைச் சேர்ந்த சிறிய தனியார் மீன்பிடிப் படகுகள் கடலில் மிதந்து கொண்டிருந்த 17-க்கும் மேற்பட்டவர்களை மீட்டுள்ளன.

மீட்கப்பட்ட 69 பேரில் 15 சிறுவர்களும் அடங்குகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள பிரதமர் மார்க் பிலிப்ஸ், "காணாமல் போனவர்களை தேடிக் கண்டுபிடிப்பதே எங்களின் முழு கவனமாக உள்ளது. இன்னும் நம்பிக்கை உள்ளது.

இந்த துயரச் சம்பவத்திற்கு அதிகாரிகளின் அலட்சியம், விதிமீறல் அல்லது குற்றவியல் தவறுகள் காரணமாக இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்" என எச்சரித்துள்ளார்.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US