கனடாவில் 27,000 கோழிகள் உடல் கருகி பலி
பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் லாங்க்லி நகரில் உள்ள ஒரு கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 27,000 கோழிகள் உயிரிழந்துள்ளன.
இந்த தகவலை அந்தப் பகுதியின் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் ஞாயிறு காலை 2 மணியளவில், அமெரிக்க எல்லைக்கு அருகிலுள்ள 256வது வீதி பகுதியில் ஏற்பட்டதாக, லாங்க்லி நகர துணை தீயணைப்பு தலைவர் கோரி பார்க்கர் தெரிவித்துள்ளார்.
தீ பற்றி தகவல் கிடைத்தவுடன் குழுக்கள் விரைந்து சம்பவ இடத்திற்குச் சென்றன. அப்போது தீ வேகமாக பரவி கொண்டிருந்ததாகவும், கூடுதல் குழுக்கள் அவசரமாக அழைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீயை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருந்தது. கட்டிடங்கள் மிகவும் பெரியவை. எனினும், எங்கள் குழுவினர் தீயை மேலும் பரவாமல் தடுப்பதில் சிறப்பாக செயல்பட்டனர் என பார்க்கர் குறிப்பிட்டுள்ளார்.
தீயணைப்பு பணியில் ஈடுபட்ட இரு வீரர்கள் வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு பெரிய கட்டிடங்கள் முழுமையாக அழிந்தன என்றும், அதில் இருந்த 27,000 கோழிகள் தீயில் எரிந்து உயிரிழந்தன என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தற்போது, சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.