சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக ஒன்றாரியோ பிரஜை கைது
கனடாவில் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் ஒன்றாரியோ மாகாண பிரஜை ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
2016 ஆம் ஆண்டில் ஒரு பெண்ணை பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்திய குற்றச்சாட்டில், ஒன்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்த 28 வயதான கொரி பேட்ரிக் மாக்கி (Cory Patrick Mackey) என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
நோவா ஸ்கோஷியா மனித கடத்தல் பிரிவு (Human Trafficking Unit - HTU), கடந்த பெப்ரவரி மாதம் முறைப்பாடு செய்யப்பட்டது.
அதில், 2016-இல் ஒரு பெண் பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியானது.
விசாரணையின் போது, சம்பவங்கள் நோவா ஸ்கோஷியாவில் இரண்டு மாதங்களுக்கு மேல் நடந்ததையும், குற்றவாளியான மாக்கி தற்போது ஒன்டாரியோவின் கிங்ஸ்டனில் வசிப்பதும் தெரியவந்தது.
ஜூன் 22ஆம் திகதி, அதிகாரிகள் கிங்ஸ்டன் நகரத்திற்கு பயணம் செய்து அவரை கைது செய்தனர்.
மாக்கி ஹாலிஃபாக்ஸ் மாகாண நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில், சில நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.