பிரித்தானியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 292 பேர் உயிரிழப்பு!
பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் Covid-19 தொற்றால் 33,865 பேர் பாதிக்கப்பட்டதோடு 292 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக 91இலட்சத்து 30ஆயிரத்து 857 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1இலட்சத்து 40ஆயிரத்து 964பேர் மரணமடைந்துள்ளனர்.
பிரித்தானியாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு 15 இலட்சத்து 63ஆயிரத்து 807 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 1,030 பேர் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 35,965 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 74இலட்சத்து 26 ஆயிரத்து 086 ஆக உயர்ந்துள்ளது.