கனடிய ராணுவ ஹெலிகாப்டருக்கு லேசர் தாக்குதல் நடத்தியவருக்கு தண்டனை
அலாஸ்காவில் பயிற்சி செய்துகொண்டிருந்த கனடிய ராணுவ ஹெலிகாப்டர் மீது உயர் சக்தியுள்ள லேசர் ஒளி தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 வீரர்கள் காயமடைந்தனர்.
இதற்காக அலாஸ்காவின் டெல்டா ஜங்ஷன் பகுதியில் வசிக்கும் 49 வயதுடைய ஹைடீ குடெர்மோட் (Heide Goodermote) என்பவருக்கு மூன்று ஆண்டு அவதானிப்பு (probation) தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
"என் வீட்டிற்கு மேல் தொடர்ந்து ஹெலிகாப்டர்கள் பறப்பது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் எங்கே வேண்டுமானாலும் பறக்க முடியாது. எனவே, அவர்களுக்குப் பாடம் கற்பிக்கவே லேசர் ஒளியை செலுத்தினேன் என குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு இலக்காகிய ஹெலிகாப்டர்கள், 408 டாக்டிக்கல் ஹெலிகாப்டர் எஸ்குவாட்ரன் (408 Tactical Helicopter Squadron) குழுவைச் சேர்ந்த CH-146 Griffon ஹெலிகாப்டர்கள் ஆகும்.
இதில் மூன்று வீரர்களுக்கு கண் பாதிப்புகள் ஏற்பட்டதாக அமெரிக்க நீதித்துறை அறிவித்துள்ளது. "காயமடைந்த வீரர்களுக்கு உடனடி மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன.
அவர்கள் எந்தவித தீவிர காயங்களுக்கும் உள்ளாகவில்லை என கனடிய தேசிய பாதுகாப்புத் துறையின் (Department of National Defence) பேச்சாளர் அலெக்ஸ் டெட்ரால்ட் (Alex Tétreault) தெரிவித்தார்.
இராணுவ ஹெலிகாப்டர்களை லேசர் தாக்குதலில் இலக்காக்குவது அமெரிக்க மற்றும் கனடிய பாதுகாப்புத் துறைகளால் கடுமையாக கண்டிக்கப்படும் குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.