மார்கம் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது
கனடாவின் மார்க்கம் பகுதியில் கடந்த புதன்கிழமை நடந்த வன்முறையுடன் கூடிய கொள்ளை சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
யோர்க் பிராந்திய போலீசார் (YRP) தெரிவித்ததின்படி, வுட்பைன் அவென்யூ (Woodbine Avenue) மற்றும் யோர்க் டெக் டிரைவ் (Yorktech Drive) பகுதியில் அமைந்துள்ள Costco அருகிலுள்ள ஒரு வாகன தரிப்பிட பகுதியில், மாலை 5 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொல்லைக்குள்ளான நபர், இணையத்தில் அறிமுகமான ஒருவருக்கு உயர்தர காலணிகளை விற்பனை செய்ய சென்றுள்ளார்.
ஆனால், காலணிகளை காண்பிக்கும் போது, கொள்வனவு செய்ய வந்திருந்தவர் உட்பட நான்கு சந்தேகநபர்கள் விற்பனை செய்ய வந்தவரை தாக்கியுள்ளனர்.
மேலும், ஒருவரிடம் கத்தி இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்குப் பிறகு, சந்தேகநபர்கள் அவரின் பணப்பை, ஆபரணங்கள் மற்றும் மூன்று ஜோடி காலணிகளை திருடிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு.
• ஈதன் லூங் (Ethan Luong) - 21
• டேனியல் டின் லே (Daniel Dinh Le) - 22
• அர்ஜுன் ஷர்மா (Arjun Sharma) - 24
இவர்கள் அனைவரும் ஆயுதத்தைக் கொண்டு கொள்ளை நடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.