கனடாவில் இடம்பெற்ற கோரச் சம்பவம்; 3 சிறுவர்கள் பரிதாபமாக பலி
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் எடோபிகோ பகுதியில் ஏற்பட்ட பயங்கர கார் விபத்தில் மூன்று சிறார்கள் உயிரிழந்தனர், மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக 19 வயதுடைய இளைஞர் ஒருவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த விபத்து ஹைவே Highway 401-இன் ரென்போர்த் ட்ரைவ் Renforth Drive கிழக்கு நோக்கிய வெளியேறும் பாதையில் இடம்பெற்றுள்ளது.
வேகமாக வந்த வெள்ளை நிற Dodge Caravan வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சிக்னலில் நிறுத்தப்பட்டிருந்த கறுப்பு நிற Chrysler மினிவேனை மோதி கவிழ்த்தது.
அந்த Chrysler வாகனத்தில் ஆறு பேர் பயணித்திருந்தனர். 15 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறார்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், 6 வயது சிறுமி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
ஏனைய மூவர் — 10 வயது சிறுவன், 35 வயதுடைய தாய் மற்றும் 40 வயதுடைய குடும்ப நண்பர் ஆகியோர் காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
இதேவேளை, மூன்று சிறு குழந்தைகளின் மரணம் என்னை பெரிதும் பாதிக்கிறது.
இந்த கொடூரமான செயலில் காரணமானவர், அதிகபட்ச தண்டனையை எதிர்கொள்ள வேண்டும்" என ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.