றொரன்டோவில் சக பணியாளர்கள் மூவருக்கு கிடைத்த பேராதிர்ஸ்டம்
றொரன்டோவில் மூன்று சக பணியாளர்கள் லொத்தர் சீட்டிலுப்பில் பெருந்தொகை பரிசினை வென்றெடுத்துள்ளனர்.
அன்ட்ரே நிக்கலோசன், எய்லீன் மொன்டோசா மற்றும் ரோஸ் அந்தனிப்பிள்ளை ஆகியோரே இவ்வாறு பரிசு வென்றேடுத்துள்ளனர்.
கொஸ்ட்கோ நிறுவனத்தின் பணியாளர்களே மூன்று பேர் ஒன்றாக லொத்தர் சீட்டிலுப்பில் பங்கேற்றுள்ளனர்.
கடந்த ஒக்ரோபர் மாதம் 11ம் திகதி நடைபெற்ற சீட்டிலுப்பில் இந்த மூன்று பேருக்கும் ஒரு மில்லியன் டொலர் பரிசுத் தொகை கிடைக்கப் பெற்றுள்ளது.
இரவு பணி நேரத்தில் லொத்தர் சீட்டு வெற்றி குறித்து பரீட்சித்த போது பரிசுத் தொகை வென்றெடுக்கப்பட்டமையை அறிந்து கொண்டதாக அன்ட்ரே கூறுகின்றார்.
பல தடவைகள் ஸ்கேன் செய்து பரிசுத் தொகை உண்மைதானா என்பதனை தாம் உறுதி செய்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஒ.எல்.ஜீ என்னும் லொத்தர் சீட்டிலுப்பில் இவ்வாறு பரிசுத் தொகை வென்றெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசுத் தொகையைக் கொண்டு மூன்று நண்பர்களும் பல தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கின்றனர்.