உலகின் மிகப்பெரிய பணக்காரர் பட்டத்தை இழந்தார் எலான் மஸ்க்
உலகின் மிகப் பெரிய பணக்காரர் பட்டியலில் ஒரக்கிள் மென் பொருள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன், ஈலோன் மஸ்க்கை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
புதன்கிழமை காலை எலிசனின் சொத்து மதிப்பு 393 பில்லியன் அமெரிக்க டொலர்களாக (£290 பில்லியன்) உயர்ந்து, மஸ்க்கின் சொத்து மதிப்பு 385 பில்லியன் அமெரிக்க டொலர்களை (£284 பில்லியன்) தாண்டியுள்ளதாக ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டு எண் தெரிவிக்கிறது.
எலிசனின் சொத்து மதிப்பில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்ட ஒரக்கிள் பங்குகள் 40 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்ததை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்த பத்தாண்டுகளில் ஈலோன் மஸ்க் லட்சிய இலக்குகளின் பட்டியலை அடைந்தால், அவர் 1 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் (£740 பில்லியன்) சம்பளப் பொதியைப் பெற முடியும் என்று டெஸ்லா தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த ஆண்டு மஸ்க்கின் டெஸ்லா பங்குகள் சரிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.