ஓன்டாரியோவில் இடம்பெற்ற கோர விபத்து மூவர் பலி
கனடாவின் ஒன்டாரியோவின் பிக்கரிங்கில் இரவு நடைபெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததுடன், இருவர் படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓன்டாரியோ மாகாணக் காவல்துறை இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த விபத்து, ஹைவே 7 மற்றும் கன்செஷன் வீதி 6 சந்திக்கும் பகுதியில், இடம்பெற்றது.
கிழக்கு திசையில் சென்ற ஒரு எஸ்.யூ.வீ SUV வாகனம், மேற்குத் திசையில் எதிரே வந்த மற்றொரு எஸ்.யூ.வீ SUV-வுடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிழக்குத் திசையில் வாகனத்தை ஓட்டிச் சென்ற 82 வயதான போர்ட் பெரி பகுதியைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேற்குத் திசையில் வாகனத்தில் பயணித்த 63 வயதான மார்க்கம் பகுதியைச் சேர்ந்தவரும், 68 வயதான ஸ்கார்பரோவைச் சேர்ந்தவரும் உயிரிழந்தனர்.
அதே வாகனத்தில் பயணித்த 64 வயதான சாரதி மற்றும் 70 வயதான ரிச்மண்ட் ஹில் பகுதியைச் சேர்ந்த மற்றொரு பயணி, உயிருக்கு ஆபத்தான நிலையிலான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, OPPவின் போக்குவரத்து விபத்து மேலாண்மை மற்றும் விசாரணை அணி, தொழில்நுட்ப விபத்து விசாரணையாளர்கள் மற்றும் மறுஅமைப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
பிக்ரிங் தீயணைப்பு சேவைகள் மற்றும் டர்ஹாம் பேராமெடிக் சேவைகளும் இந்த முயற்சியில் ஈடுபட்டன.
இந்த விபத்தை நேரில் கண்டவர்கள் அல்லது டாஷ்கேம் காட்சிகள் வைத்திருப்பவர்கள், 1-888-310-1122 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.