வெளிநாடொன்றில் கரையை கடந்த சூறாவளி: 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு! வீடியோ
ஜப்பானில் உள்ள கியுஷு பகுதியில் ஷான்ஷான் என்ற சூறாவளி கரையை கடந்துள்ளது.
சூறாவளி கரையை கடக்கும் போது கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டதுடன் பலத்த காற்று வீசியுள்ளது. இதில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“過去最強クラスの可能性”
— ニュースウオッチ9(サタデーウオッチ9) (@nhk_nw9) August 28, 2024
暴風域を伴いながら進む台風10号
鹿児島には特別警報
宮崎では突風被害も…
頑丈な建物で
安全を確保して過ごすようにして下さい
今後の進路・雨の見通しは?
詳しくはこちらから?https://t.co/r49NST1T6i#台風10号#矢崎智之#ニュースウオッチ9 pic.twitter.com/WZ8bygaClz
இதைத்தொடர்ந்து, ஜப்பான் வானிலை ஆய்வு மையம், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்து கொள்ளும்படி தீவிர எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சூறாவளியால் மின்விநியோகத்திலும் இடையூறு ஏற்பட்டது.
கடும் மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட கூடிய சூழலும் காணப்படுகிறது. அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.