ஒன்றாரியோ கோர தீ விபத்தில் சிக்கி மூவர் பலி
ஒன்றாரியோவில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒன்றாரியோவின் சட்பரி பெரும்பாக பகுதியின் கொனிஸ்டனில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கருசோ வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர்.
வீட்டுக்குள் நுழைந்த போது மூன்று பேரின் சடலங்கள் காணப்பட்டதனை பொலிஸார் கண்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. மரணத்திற்கான காரணங்களை கண்டறியும் நோக்கில் பிரதேப் பரிசோதனை முன்னெடுக்கப்பட உள்ளது.
விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தினால் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எவ்வித பிரச்சினைகளும் கிடையாது ஏன அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான தகவல்கள் கிடைக்கப் பெற்றால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.