பிரித்தானியாவில் புயல் தாக்கியதில் 3 பேர் பலி
பல தசாப்தங்களில் இல்லாத அளவு பிரித்தானியாவை தாக்கிய மிக மோசமான புயலில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
யூனிஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலினால், லண்டனில் 30 வயதுடைய ஒரு பெண்ணும், ஹாம்ப்ஷயரில் 20 வயதில் ஒரு ஆணும், மெர்சிசைடில் 50 வயதில் ஒரு ஆணும் உயிரிழந்தனர். ஐரோப்பாவில் மற்ற இடங்களில் ஐந்து பேர் உயிரிழந்தனர் என தெரியவந்துள்ளது.
நேற்று பிரித்தானியாவை தாக்கிய யூனிஸ் புயலில் இருந்து வீசிய கடுமையான காற்று மரங்களை வீழ்த்தியது மற்றும் குப்பைகளை பறக்க செய்தது.
மேலும், பாடசாலைகள் மற்றும் வீதிகளை மூட வழிவகுத்தது. இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதன்படி வைட் தீவில் 122 மைல் வேகத்தில் வீசிய காற்று இங்கிலாந்தில் ஒரு தற்காலிக சாதனையை படைத்தது.
தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு வேல்ஸின் கரையோரப் பகுதிகள், தென்கிழக்கு இங்கிலாந்துடன் சேர்ந்து, நேற்று அதிகாலை வானிலை அலுவலகத்தால் அரிய சிவப்பு வானிலை எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டன.