றொரன்டோ வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயம்
றொரன்டோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்துள்ளனர்.
டான்போர்த் மற்றும் ஜோன்ஸ் வீதிகளில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு வாகனங்கள் ஒன்றுக்கு ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒரு வாகனம் அருகாமையில் இருந்த கம்பமொன்றில் மோதியுள்ளது.
வாகனமொன்று மிக வேகமாக மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தினை மேற்கொண்ட நபரை பொலிஸார் கைது செய்ய முயற்சித்த போது பொலிஸ் உத்தியோகத்தர்களும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் உத்தியோகத்தர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை அரம்பித்துள்ளனர்.