பீல் பிராந்திய காவல்துறை அதிகாரிகள் மூவர் மீது ஒழுங்கு நடவடிக்கை!
காவல்துறை பதவி உயர்வு செயல்முறை தொடர்பான ரகசிய தகவல்களைப் பெற்றுக் கொண்டமை மற்றும் பகிர்ந்துகொண்டமை அம்பலமானதை அடுத்து, பீல் பிராந்திய காவல்துறையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு சில பங்கேற்பாளர்களால் பதவி உயர்வு செயல்முறையின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு புகார் கிடைத்தது.
அதன் பேரில் நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தோம்," என்று பீல் காவல்துறை தெரிவித்துள்ளது. நாங்கள் இதனைப் பற்றி அறிந்துகொண்டோம், விசாரித்தோம், தகுந்த நடவடிக்கையும் எடுத்துள்ளோம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விசாரணையின் விளைவாக, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மூவருக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த முறைகேட்டில் எந்தவொரு கண்காணிப்பாளர் அல்லது மூத்த அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதற்கான "ஆதாரங்கள் எதுவும் இல்லை" என்று பீல் காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.