வெனிசுவேலாவை தாக்கிய அமெரிக்கா ; ட்ரம்ப் சொன்ன 3 அதிர்ச்சி காரணங்கள்
அமெரிக்கா ஏன் திடீரென நேற்றைய தினம் இவ்வளவு பெரிய தாக்குதலை நடத்தியது என்பதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மூன்று முக்கிய காரணங்களைக் குறிப்பிடுகிறார்.
போதைப்பொருள் கடத்தல்
வெனிசுவேலாவில் இருந்து அமெரிக்காவுக்குப் பெரும் அளவில் போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு ஜனாதிபதி மதுரோவே மூளையாகச் செயல்படுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. மதுரோவை ஒரு 'சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்' என அறிவித்து, அவரைக் கைது செய்ய 15 மில்லியன் டொலர் சன்மானத்தையும் அமெரிக்கா ஏற்கனவே அறிவித்திருந்தது.

எண்ணெய் வளக் கட்டுப்பாடு
உலகின் மிகப்பெரிய மசகு எண்ணெய் இருப்பைக் கொண்டுள்ள வெனிசுவேலாவின் எண்ணெய் துறை, மதுரோவின் ஆட்சியில் சிதைந்துவிட்டதாக ட்ரம்ப் கூறுகிறார். அதனை அமெரிக்க நிறுவனங்களின் உதவியுடன் சீரமைத்து, உலக எண்ணெய் சந்தையை நிலைப்படுத்துவது அமெரிக்காவின் மறைமுகத் திட்டமாகும்.
எல்லைப் பாதுகாப்பு
மற்றும் ஏதிலிகள் பிரச்சினை வெனிசுவேலாவின் பொருளாதார நெருக்கடியால் லட்சக்கணக்கான மக்கள் அமெரிக்கா நோக்கி ஏதிலிகளாகத் தஞ்சமடைகின்றனர். இது அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என ட்ரம்ப் நிர்வாகம் கருதியது.
தாக்குதல் நடத்தியதிற்கு இதுவே முக்கிய காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.