ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற 3 இலங்கையர்கள் அதிரடியாக கைது
Sri Lankan Peoples
Italy
Passport
By Sulokshi
போலி ஆவணங்களுடன் அல்பேனிய எல்லையான கெப்டானா (Qafë Thana) வை கடக்க முயன்ற 3 இலங்கையர்கள் அல்பேனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்தாலியில் வழங்கப்பட்ட குடியிருப்பு அனுமதிப் பத்திரங்களை வைத்திருந்ததாகவும், அவை போலியானவை எனவும் சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அல்பேனிய அதிகாரிகள் 36, 51 மற்றும் 57 வயதுடைய 3 இலங்கையர்களையும் கைது செய்துள்ளனர்.
வீசா மோசடி குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் பொருள் ஆதாரங்களாகக் கைப்பற்றப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US