ஓஷாவாவில் கொள்ளையுடன் தொடர்புடைய மூவரை தேடும் பொலிஸார்
கனடாவின் டர்ஹாம் பகுதியில், ஒரு நபரை துப்பாக்கியால் தாக்கியதற்கும் அவரது ஆபரணங்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தொடர்பில், பொலிசார் மூன்று சந்தேகநபர்களை தேடி வருகின்றனர்.
கடந்த 5ம் திகதி இரவு 9:00 மணிக்கு பிறகு, கொல்ட்ஸட்ரீம் Coldstream Drive மற்றும் டவுன்டன் வீதி Taunton Road பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒரு நபர் தனது வாகனத்திலிருந்து இறங்கும் போது மூன்று சந்தேகநபர்கள் அவரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் அவரை தரையில் தள்ளியதாகவும் பின்னர், ஒரு சந்தேகநபர் துப்பாக்கியால் அவரது தலையில் தாக்கி, அவரின் ஆபரணங்களை பறித்து, கருமை நிற SUV வாகனத்தில் மூன்று சந்தேக நபர்களும் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், பாதிக்கப்பட்ட நபரை சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்த மூன்று சந்தேகநபர்களையும் பொலிஸார் தேடிவருகின்றனர்: சந்தேக நபர்களில் இருவர் மெல்லிய உடல் கட்டமைப்புடன் இருப்பவர்கள், உயரம் சுமார் 5’10” எனவும் மூன்றாவது நபர் பருமனான உடல் கட்டமைப்புடன் காணப்பட்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.