கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டியல் பெண் உயிரிழப்பு
கனடாவின், மார்க்கம் நகரத்தில் வீடொன்றில் இடம்பெற்ற இரட்டை துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உயிரிழந்ததுடன், ஒரு ஆண் தீவிரமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வீட்டின் மீது பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சோலஸ் ரோட் பகுதியின் கேஸ்டில்மோர் அவென்யூ மற்றும் ஸ்வான் பார்க் ரோட் அருகே இந்த வீடு அமைந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரையும் கண்டதுடன், மேலும், சுட்டுக்கொல்லப்பட்ட ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாயையும் கண்டுள்ளனர்.
உடனே இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், 20 வயதான நீலக்ஷி ரகுதாஸ் என்ற மார்க்கம் பகுதியைச் சேர்ந்த பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்த வீடு 2018 ஆம் ஆண்டிலிருந்து ஐந்து முறை துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியுள்ளது.
பொலிஸார் கண்காணிப்பு காட்சிகளை வெளியிட்டிருந்தாலும், இதுவரை எந்தக் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
"இந்த வீடு பலமுறை குறிவைக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றவாளிகள் திட்டமிட்டு இந்த வீட்டிற்கு வந்து இந்த கொடூரச் செயல்களைச் செய்துள்ளனர்.
இதுவே ஒரு இலக்கு தாக்குதல் என்பதற்கு இது சான்றாகும்," என பொலிஸ் அதிகாரி கேவின் நெப்ரிஜா தெரிவித்தார்.
பொலிஸார் இதுகுறித்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.