30 விமானங்களை கொள்வனவு செய்ய எயார் கனடா நிறுவனம் திட்டம்!
எயார் கனடா நிறுவனம் 30 புதிய விமானங்களை கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளது.
சுவீடன் நிறுவனமொன்றிடமிருந்து இந்த விமானங்கள் கொள்வனவு செய்யப்பட உள்ள்தாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஹார்ட் எரோ ஸ்பேஸ் என்ற நிறுவனத்திடமிருந்து எயார் கனடா நிறுவனம் இவ்வாறு 30 விமானங்களை கொள்வனவு செய்ய உள்ளது.
இந்த விமானங்கள் அனைத்தும் இலத்திரனியல் ஹைபிரைட் விமானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விமானங்கள் எவ்வளவு தொகைக்கு கொள்வனவு செய்யப்பட உள்ளது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
எயார் கனடா நிறுவனம் ஹார்ட் எரோஸ்பேஸ் நிறுவனத்திடமிருந்து 5 மில்லியன் அமெரிக் டொலர் பெறுமதியான பங்குகளையும் கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விமானமொன்றில் சுமார் 30 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 2028ம் ஆண்டில் இந்த சேவை ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த விமானங்கள் எரிபொருளுக்காக லித்தியம் யோன் பற்றரிகளை பயன்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விமானங்கள் சுமார் 200 கிலோ மீற்றர் தூரம் வரையில் பயணிக்க கூடியவை எனவும் இதனை 400 கிலோ மீற்றர் வரையில் அதிகரிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.