ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டேன் ; அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உறுதி
தென்னாப்பிரிக்காவில் நவம்பர் இறுதியில் நடைபெற உள்ள ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நவம்பர் 22,23 ஆகிய இரண்டு நாட்கள் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
இந்த உச்சி மாநாடு, முதல் முறையாக ஆப்பிரிக்க மண்ணில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த மாநாட்டில் தான் கலந்துகொள்ளப்போவதில்லை என்றும், தனக்கு பதிலாக துணை அதிபர் ஜேடி வான்ஸ் கலந்து கொள்வார் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
இது குறித்து புளோரிடாவில் நடந்த அமெரிக்க வணிக மன்ற மியாமியில் டிரம்ப் பேசியதாவது,
தென்னாப்ரிக்காவில் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன். ஜி20 இல் தென்னாப்பிரிக்காவின் இடம் குறித்து எனக்கு உடன்பாடில்லை.
அங்கு எதிர்மறையான சூழ்நிலையையும், நில சீர்திருத்தம் மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் வழக்கு போன்ற பிரச்சினைகள் தொடர்பாக ராஜதந்திர உறவுகளை சீர்குலைத்தது.
இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் போதுதான் ஆப்பிரிக்க ஒன்றியம் குழுவில் நிரந்தர உறுப்பினராக சேர்க்கப்பட்டது.
தென்னாப்பிரிக்காவில் கம்யூனிச கொடுங்கோன்மையிலிருந்து தப்பி ஓடும் மக்களுக்கு மியாமி நீண்ட காலமாக ஒரு புகலிடமாக இருந்து வருகிறது.
டிசம்பர் 1, 2025 அன்று தென்னாப்பிரிக்காவிலிருந்து ஜி20 தலைமைப் பொறுப்பை அமெரிக்கா எடுத்துக் கொள்ளும், மேலும் நவம்பர் 30, 2026 வரை குழுவிற்குத் தலைமை தாங்கும் என கூறினார்.