கனடா விசா ; மருத்துவ பரிசோதனை விதிமுறை புதுப்பிப்பு
கனடா அரசாங்கம், தற்காலிக குடியிருப்புக்கான (temporary resident) மருத்துவ பரிசோதனை விதிமுறைகளைப் புதுப்பித்துள்ளது.
அதன்படி 2025 நவம்பர் 3-ஆம் திகதி முதல், கனடா தற்காலிக குடியிருப்புக்கான விண்ணப்பதாரர்கள் எந்த நாடுகளில் வாழ்ந்திருக்கிறார்கள் அல்லது பயணித்திருக்கிறார்கள் என்பதனை அடிப்படையாகக் கொண்டு, மருத்துவ பரிசோதனை (IME) அவசியம் என புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் IME செய்திருக்க வேண்டும்
6 மாதங்களுக்கு மேல் கனடாவில் தங்க விரும்பும் அனைவரும் IME செய்ய வேண்டும். குறிப்பாக, பெற்றோர் மற்றும் பாட்டி-தாத்தா super visa விண்ணப்பதாரர்களுக்கு இது கட்டாயம் என கூறப்பட்டுகின்றது.
IME தேவைப்படும் நாடுகள் - அர்ஜென்டினா, கொலம்பியா, உருகுவே, வெனிசுவேலா
IME தேவைப்படாத நாடுகள் - அர்மீனியா, போஸ்னியா & ஹெர்ஸிகோவினா, ஈராக், லாட்வியா, லிதுவேனியா, தைவான்
இந்த மாற்றங்கள், கனடாவின் பொதுச் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதேவேளை இந்திய மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு விண்ணப்பதாரர்களுக்கு IME தேவையானது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
மேலும், IME-யை மீண்டும் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் விலக்கு பெற, விண்ணப்பதாரர்கள் கடந்த 5 ஆண்டுகளில் IME செய்திருக்க வேண்டும் மற்றும் அதில் “low risk” என மதிப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இந்த தற்காலிக பொதுக் கொள்கை 2029 ஒக்டோபர் 5ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளை Express Entry வழியாக நிரந்தர குடியிருப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் வெளிநாட்டினர், IME சான்றிதழ்களை முன்பே சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.