இயற்கை அனர்த்தத்தை தடுக்க தவறிய 30 பேர் சுட்டுக்கொலை ; கிம் உத்தரவால் அதிர்ச்சி
இயற்கை அனர்த்தத்தை தடுக்க தவறிய 30 அதிகாரிகளை சுட்டுக்கொல்லுமாறு வடகொரிய ஜனாதிபதி கிம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியாவில் மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு ஆகியவற்றை தடுக்க தவறிய 30 அதிகாரிகளை சுட்டுக்கொல்லுமாறு வடகொரிய ஜனாதிபதி கிம்ஜொங்அன் உத்தரவிட்டுள்ளார் என நியுயோர்க் போஸ்ட்செய்தி வெளியிட்டுள்ளது.

உறுதிப்படுத்தப்படாத தகவல்
வடகொரியாவில் கடந்த கோடைகாலத்தில் தீடிரென நிகழ்ந்த இயற்கை அனர்த்தம் காரணமாக 4000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் 30 அதிகாரிகளை சுட்டுக்கொல்ல வடகொரிய ஜனாதிபதி உத்தரவை வழங்கியதாக கூறப்படுகின்றபோதும், எனினும் இந்த தகவலை சுயாதீன வட்டாரங்கள் உறுதிப்படுத்தவில்லை.

கொல்லப்பட்ட அதிகாரிகள் யார் என்பது குறித்த விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை எனினும்,வெள்ள அனர்த்தத்தை தொடர்ந்து பதவி நீக்கப்பட்டவர்களில் முக்கிய அதிகாரிகள் சிலர் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த அதிகாரிகள் தங்கள் தலை எப்போது துண்டிக்கப்படும் என தெரியாதநிலையிலிருந்தனர் என முன்னாள் இராஜதந்திரியொருவர் தெரிவித்தள்ளார்.
மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த மாதம் பார்வையிட்ட வடகொரிய ஜனாதிபதி இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளகட்டியெழுப்ப பலமாதங்களாகும் என தெரிவித்திருந்ததாக தகவல் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        