உகாண்டாவில் Dinga Dinga வைரஸால் 300க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் டிங்கா டிங்கா (Dinga Dinga) வைரஸால் 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் உகாண்டாவில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுமிகளிடையே பரவியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த மர்ம நோயின் அதிக தாக்கம் உகாண்டாவின் புண்டிபாக்யோ (Bundibugyo) மாவட்டத்தில் காணப்படுகிறது. இதுகுறித்து வெளியான செய்திகளின்படி,
உடலில் ஒரு கூர்மையான நடுக்கம்
இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளியின் உடலில் ஒரு கூர்மையான நடுக்கம் உள்ளது. இந்த நடுக்கம் மிகவும் வலுவானது, நோயாளி நடனமாடுவது போல் தெரிகிறது.
நோய்த்தொற்று அதிகமாக இருந்தால் நோயாளிக்கு முடக்குவாதம் ஏற்படலாம் என கூறப்படுகிறது. புண்டிபாகியோ மாவட்ட சுகாதார அதிகாரி கியிடா கிறிஸ்டோபரின் கூற்றுப்படி, இந்த வைரஸ் முதன்முதலில் 2023-இல் கண்டறியப்பட்டது.
அப்போதிருந்து, உகாண்டா அரசாங்கம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. அதேவேளை இந்த Dinga Dinga வைரஸால் இதுவரை எந்த இறப்பும் பதிவாகவில்லை. டிங்கா டிங்கா வைரஸால் ஏற்பட்ட மரணம் குறித்து உகாண்டாவின் சுகாதாரத் துறை இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. குறித்த நேரத்தில் மருந்துகளை உட்கொள்ளுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் புந்திபாகியோவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயைத் தடுக்க இதுவரை தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதார அதிகாரி கியாதா தெரிவித்துள்ளார். எனினும் இதில் பாதிக்கப்பட்டால் மீண்டு வர ஒரு வாரம் ஆகும்.