ஈரானில் அதிரடி வேட்டை ; இராணுவத் தளங்களை இரகசியமாகப் படம் பிடித்த 35 பேர் கைது
ஈரானின் இராணுவத் தளங்களை இரகசியமாகப் புகைப்படம் பிடித்தமை மற்றும் தவறான தகவல்களைப் பரப்பியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ், அந்நாட்டின் லோரெஸ்தான் (Lorestan) மாகாணத்தில் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரானின் தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனத்தை மேற்கோள்காட்டி அல் ஜசீரா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 16 பேர் மீது மிகப்பாரிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஈரானின் ரகசிய அரசுத் தளங்கள் மற்றும் இராணுவ முகாம்களைச் சட்டவிரோதமாகப் படம் பிடித்தமை. ஈரானுக்கு எதிராகச் செயல்படும் 'விரோத' வெளிநாட்டு ஊடக வலையமைப்புகளுடன் இணைந்து ரகசியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டமை.
ஏனைய 19 நபர்களும் சமூக வலைத்தளங்கள் மற்றும் இதர ஊடகங்கள் வாயிலாக அரசாங்கத்திற்கு எதிரான தவறான தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் ஈரான்-இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், உளவு பார்த்தல் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பைக் சீர்குலைத்தல் போன்ற செயல்களுக்கு எதிராக ஈரான் தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.