கனடிய எல்லையில் 349 கிலோ கொக்கைன் பறிமுதல்
கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் போர்ட் எட்வர்ட் – ப்ளூ வாட்டர் பாலம் எல்லைப் பகுதியில், கனடா எல்லை சேவை முகமை (CBSA) அதிகாரிகள் மொத்தம் 349 கிலோ கொக்கைன் போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.
இதன் மதிப்பு $43.7 மில்லியன் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பறிமுதல் இரண்டு தனித்தனியான சம்பவங்களில் நடந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 13 – அமெரிக்காவிலிருந்து வந்த வணிக லாரி ஒன்றை இரண்டாம் கட்ட சோதனைக்கு அனுப்பியபோது, அதிலிருந்த 6 பெட்டிகளில் 150 கிலோ கொக்கைன் (மதிப்பு $18.8 மில்லியன்) கண்டுபிடிக்கப்பட்டது.
போதைப்பொருள் அச்சுறுத்தல்
இந்த சம்பவத்தில் பிராம்ப்டன் பகுதியைச் சேர்ந்த 28 வயது நபர் கனடிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
மேலும் ஆகஸ்ட் 14 – மறுநாள் அமெரிக்காவிலிருந்து வந்த டிரெய்லர் லாரி ஒன்றை சோதனையிட்டபோது, 199 கிலோ கொக்கைன் (மதிப்பு $24.9 மில்லியன்) பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தின் போது எடோபிகோ பகுதியைச் சேர்ந்த 38 வயது நபர் கைது செய்யப்பட்டார். இருவருக்கும் கொக்கைன் இறக்குமதி செய்தது மற்றும் கொக்கைன் கடத்தல் நோக்கத்திற்காக வைத்திருந்தது என்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கனடியர்களை போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்க எங்கள் உறுதியான முயற்சிகள் தொடரும்,” என கனடிய காவல்துறை தெரிவித்துள்ளது.