பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்ததுடன், 38 பேர் காணாமல் போயுள்ளனர் என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நேரத்தில் கப்பலில் மொத்தம் 65 பேர் பயணித்துள்ள நிலையில், 23 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
அடிக்கடி விபத்துக்கள்
இந்தக் கப்பல், கிழக்கு ஜாவா மாநிலம் பன்யுவாங்கி துறைமுகத்திலிருந்து பாலி தீவுக்கு புறப்பட்ட அரை மணி நேரத்திற்குள் கவிழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
17,000 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டமான இந்தோனேசியாவில் படகு சேவை பொது போக்குவரத்தாக காணப்படுகிறது.
படகுகளில் போதுமான உயிர்காக்கும் உபகரணங்கள் இன்மை, அதிக சுமைகளை ஏற்றுதல் ஆகியவற்றால் விபத்துக்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன.
2023 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் சுலவேசி தீவுக்கு அருகே சிறிய படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர்.